அடேங்கப்பா… 4 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • February 7, 2023 / 08:27 PM IST

திரையுலகில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘மைக்கேல்’ கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்துள்ளாராம். இப்படத்தை ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், திவ்யன்ஷா கௌஷிக், வருண் சந்தேஷ், அய்யப்பா ஷர்மா, அனசுயா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – கரண் C புரொடக்ஷன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்த படம் ரூ.10.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus