நடிகை சன்னிலியோனுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் வாழ்த்தை அவரது கணவர் டேனியல் வேபர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CAHaAIyHRN8/
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் இன்று தனது 39ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இணையத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சன்னி லியோன் கணவர் டேனியல் வேபர் அவரை வெகுவாக புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பூங்கொத்து உடன் சன்னி லியோன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “பிறந்த நாள் வாழ்த்துகள் பேபி. என் வாழ்க்கையில் உன் பங்கு அதிகம். என் மனதில் இருக்கும் அனைத்தையும் உன்னுடன் சொல்ல முடியும்.
https://www.instagram.com/p/CAGyp-WDANh/
லட்சகணக்கானவர்களுக்கு நீ சிறந்த ரோல் மாடலாக இருக்கிறாய். நீ ஒரு அடையாளம். உன் சொந்தப் பாதையில் செல்லும் போது மற்றவர்களின் விமர்சனங்களை பற்றி கவலைப்பட்டதே இல்லை. உன்னை நீ பாராட்டிக் கொள்ளலாம். உன் தாழ்மையான பண்பினால் நீ நினைக்கும் அனைத்தும் அடைவாய். நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்“ என்றுள்ளார்.
https://www.instagram.com/p/B_T0a14jM2c/
நடிகை சன்னி லியோன், பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ள வீடியோவில் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகை சன்னி லியோனின் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்கு திரை உலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.