தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ‘நவரச நாயகன்’ கார்த்திக். அதன் பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கார்த்திக், மீண்டும் ரீ-என்ட்ரியாகி அருண் விஜய்யின் ‘மாஞ்சா வேலு’, விக்ரமின் ‘ராவணன்’, தனுஷின் ‘அனேகன்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, மகன் கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’ ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது, 60 வயதான கார்த்திக் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் டி.எம்.ஜெயமுருகன். இதில் மிக முக்கிய ரோல்களில் சுகன்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜான் விஜய், அபிதா மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த படத்தில் பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று ‘நவரச நாயகன்’ கார்த்திக் அடம் பிடித்ததாக தகவல் கிடைத்துள்ளது. கார்த்திக் கேட்டதால், அப்படத்தின் இயக்குநரும் சன்னி லியோனிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவரும் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். விரைவில் மும்பையில் இப்பாடலை படமாக்க ‘தீ இவன்’ டீம் திட்டமிட்டுள்ளனர்.