2 ‘பிக் பாஸ்’ நடிகைகளுடன் கூட்டணி அமைக்கப்போகிறாரா சன்னி லியோன்?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ மூலம் ஃபேமஸான நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா – ஜூலி. ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் அடித்தது ஜாக்பாட். இருவருமே பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்கள். இப்போது, நடிகைகள் ஐஸ்வர்யா தத்தாவும் – ஜூலியும் இணைந்து நடித்து வரும் புதிய படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’.

இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ.ஜி இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஹீரோவாக அர்ஜுமன் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நடிகைகள் ரித்திகா – ஷாந்தினி – அனித்ரா நாயர், நடிகர் ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாட பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோனியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இத்தகவலை படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ.ஜி-யே சமூக வலைத்தளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Share.