ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் !

  • December 31, 2022 / 09:55 AM IST

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குனர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது .

சன்னி லியோன் மற்றும் ஜி,பி,முத்து ஆகியோரின் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் . இந்நிலையில் “ஓ மை கோஸ்ட்” படத்தை விளம்பரப்படுத்த பல நிகழ்ச்சிகளை செய்து இருந்தனர் . அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் சன்னி லியோன் மற்றும் ஜி,பி,முத்து வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

இருவரும் விஜய் மற்றும் ராஷ்மிகா மாதிரி தங்களை பாவித்து ஆடும் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus