பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார். இது தவிர சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது, சன்னி லியோன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஹிஸ்டாரிக்கல் ஹாரர் காமெடி ஜானர் படமான இதனை இயக்குநர் ஆர்.யுவன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ‘சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதனை ‘VAU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி.சக்தி தயாரிக்க உள்ளார். இன்று (ஏப்ரல் 19-ஆம் தேதி) இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். மிக விரைவில் நடிகை சன்னி லியோனும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம். ஜாவித் ரியாஸ் இசையமைக்கவுள்ள இதற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
. @SunnyLeone ’s new horror-comedy movie shooting commences in Chennai
A horror-comedy, directed by R. Yuvan, who earlier made the film ‘Sindhanai Sei’.
While Sunny Leone is playing the main lead character, @actorsathish and others include Mottai Rajendran, Ramesh Thilak, pic.twitter.com/UfOJMl6fHY
— Ramesh Bala (@rameshlaus) April 19, 2021