மாலத்தீவில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் சன்னி லியோன்… வைரலாகும் வீடியோ!

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடிப்பில் ‘வீரமாதேவி’ (தமிழ்), ‘ஓ மை கோஸ்ட்’ (தமிழ்), ‘ஷீரோ’ (தமிழ்) என மூன்று தமிழ் படங்களும், ஹிந்தி மொழியில் மூன்று படங்களும், கன்னட மொழியில் ஒரு படமும், மலையாள மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வீரமாதேவி’ படத்தை இயக்குநர் வடிவுடையான் இயக்கி கொண்டிருக்கிறார்.

ஹிஸ்டாரிக்கல் ஹாரர் காமெடி ஜானர் படமான ‘ஓ மை கோஸ்ட்’-ஐ இயக்குநர் ஆர்.யுவன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ‘சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனை ‘VAU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி.சக்தி தயாரித்து வருகிறார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான ‘ஷீரோ’-வை இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார். சமீபத்தில், இப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, சன்னி லியோன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான வீடியோ மற்றும் ஸ்டில்ஸை சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.