‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது.
இப்போது, நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா, துப்பறிவாளன் 2’ மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கவிருக்கிறார்.
இதனை வினோத் குமார் தயாரிக்க உள்ளார். தற்போது, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.