தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, தமிழில் உருவாகிக் கொண்டிருக்கும் சில ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ…
1. ப்ளைண்ட் – நெற்றிக்கண் :
2011-யில் ரிலீஸாகி ஹிட்டான கொரியன் படம் ‘ப்ளைண்ட்’. இந்த படத்தில் கதையின் நாயகியாக கிம் ஹா-நியூல் நடித்திருந்தார். இதனை இயக்குநர் அஹ்ன் சாங்-ஹூன் இயக்கியிருந்தார். இப்படம் தமிழில் ‘நெற்றிக்கண்’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறாராம்.
2. கவலுதாரி – கபடதாரி :
கடந்த 2019-யில் ரிலீஸாகி ஹிட்டான கன்னட படம் ‘கவலுதாரி’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ரிஷி நடித்திருந்தார். இதனை இயக்குநர் ஹேமந்த்.எம்.ராவ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழில் ‘கபடதாரி’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறாராம்.
3. அய்யப்பனும் கோஷியும் :
இந்த ஆண்டு (2020) ரிலீஸாகி ஹிட்டான மலையாள படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்த படத்தில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் சேர்ந்து நடித்திருந்தார்கள். இதனை இயக்குநர் சச்சி இயக்கியிருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யாவும் (ப்ரித்விராஜ் ரோல்), சசிக்குமாரும் (பிஜு மேனன் ரோல்) நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
4. ஹெலன் :
கடந்த 2019-யில் ரிலீஸாகி ஹிட்டான மலையாள படம் ‘ஹெலன்’. இந்த படத்தில் கதையின் நாயகியாக அன்னா பென் நடித்திருந்தார். இதனை இயக்குநர் மதுக்குட்டி ஸேவியர் இயக்கியிருந்தார். இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தை கோகுல் இயக்குகிறாராம்.
5. ஆர்ட்டிகள் 15 :
கடந்த 2019-யில் ரிலீஸாகி ஹிட்டான ஹிந்தி படம் ‘ஆர்ட்டிகள் 15’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஆயூஷ்மான் குரானா நடித்திருந்தார். இதனை இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார். இப்படம் தமிழில் ரீமேக்காகப்போகிறது. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குவாராம்.