இமயமலையில் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
August 11, 2023 / 01:02 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ நேற்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்நிலையில், இமயமலைக்கு சென்றிருக்கும் ரஜினியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.