தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி படமும், இயக்குநர் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படமும் லைன் அப்பில் இருக்கிறது. ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாபா’. ரஜினியே கதை-திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
இதில் ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸானபோது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது. சமீபத்தில், இப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. தற்போது, இதன் புதிய ட்ரெய்லரை ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.