நட்சத்திரம் நகர்கிறது பார்த்த ரஜினிகாந்த் !

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டினார். மேலும் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பாராட்டி இருந்தார் . விக்ரம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமலுக்கு போன் மூலம் தனது பாராட்டை தெரிவித்து இருந்தார் . சமீபத்தில் வெளியான ‘777 சார்லி’ படத்தையும் பாராட்டி இருந்தார் . மேலும் மாதவன் நடித்த ராக்கெட்டரி, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தை பாராட்டி இருந்தார் .


இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது . இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் , துஷாரா விஜயன் , ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த ரஜினிகாந்த் “இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை போன்றவற்றில் இதுவே உங்கள் சிறந்த படைப்பு” என்று ரஞ்சித்திடம் கூறி உள்ளார் .

இதனை மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

Share.