விமானத்தை விட்டு இறங்கி செம மாஸாக நடந்து வந்த சூப்பர் ஸ்டார் !
November 1, 2022 / 06:10 PM IST
|Follow Us
ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் .நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சில முக்கிய நட்சத்திர நடிகர்களுக்கு ‘ஜெயிலர்’ படத்திற்காக டெஸ்ட் லுக் சமீபத்தில் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.
ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் முழுப் பொறுப்பையும் நெல்சன் திலீப்குமாரிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் சில கதாபாத்திரங்களுக்கு அவர் விரும்பும் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்க இயக்குநருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தின் மிக முக்கிய பாத்திரங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது . இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு என்கிற பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சரவணன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருந்தது .
இந்நிலையில் சமீபத்தில் தான் ஜெயிலர் படத்திலிருந்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது . அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக் ஆகி இருந்தது .சென்னையில் சில நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது . இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ள ரஜினி பெங்களூர் சென்று உள்ளார் . விமானத்தில் இருந்து ரஜினி இறங்கி வரும் வீடியோ தற்போது ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகி வருகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.