சூரரைப் போற்று டிரைலர் வெளிவருகிறதா?

  • July 9, 2020 / 01:17 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளிவர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”.இந்தப்படம் எப்போது வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், வருகிற ஜூலை 23ம் தேதி சூர்யாவின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வெளியாகலாம் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “என்.ஜி.கே” .இந்த படத்தை தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வந்தார். சூரரைப்போற்று திரைப்படம் ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய கதையை கொண்டதாகும். இந்த படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டு “யு” சர்டிபிகேட் பெற்றுள்ளது. மேலும் அந்த போர்டு மெம்பர்கள் சூர்யாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ரவால், ஜாக்கி சரோப், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகி இந்த படத்தின் பாடல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தின் தீம் சாங்கை சூர்யா பாடியுள்ளார்.அந்த பாடல் வெளியான முதலே அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது‌.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் “அருவா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” என்ற படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இந்த படங்களின் அப்டேட்காக தற்போது அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus