தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வெளியான “சில்லுனு ஒரு காதல்_ திரைப்படத்தின் 14 ஆண்டு நிறைவையொட்டி அவரது ரசிகர்கள் பலர் வீடியோக்களையும் போஸ்டர்களையும் வெளியீட்டு கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள “சூரரைப்போற்று” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி, சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வரும் “முன்பே வா” என்ற பாடலை ஒரு மேடையில் பாடியுள்ளார்.
இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் இணையதளத்தில் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாடியபோது ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்கள்.
2006 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடித்திருந்தார்கள். ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட இந்த படத்தின் பாடல்களை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
இவர் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளி அந்த படத்திலுள்ள இந்த பாடலை பாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Mohanraj_Suriya/status/1303009242681503744?s=19