தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த திரைப் படத்திற்கு “யூ” சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள்.மேலும் இந்தத் திரைப்படத்தில் சூர்யா மாறுபட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார் என்று சென்சார் போர்டு பாராட்டியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் சூர்யா 2D என்டர்டெய்ன்மெண்ட் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமே இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இப்படி பல செய்திகளுக்குப் பிறகு சூர்யாவின் ரசிகர்கள் சூரரைப்போற்று வெளியீட்டுக்காக ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சூரரைப்போற்று ஓடிடியில் வெளிவரும் என்ற வதந்திகள் பரவி வந்தது. ஆனால் OTTயில் வெளியிட சென்சார் போர்டின் அனுமதி தேவையில்லை என்பதால் இது வதந்தி என்பது உறுதியானது.
தற்போது திரையரங்குகள் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் “சூரரை போற்று” திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சூர்யா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு “பொன்மகள் வந்தால்” படத்தின் மூலம் முன்னுதாரணமாக விளங்கியதாகவும், இதனால் சில திரையரங்கு உரிமையாளர்கள் இவர் மேல் கோபமாக உள்ளதால், சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் சார்ந்த படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் சார்ந்த படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். ஆனால் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், சூர்யா படத்தை வெளியிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் செய்தி வெளியிடுவோம் என்று தற்போது கூறியுள்ளார்.
இதனால் சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படத்தின் வெளியீட்டில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.