தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. நடிகர் சூர்யா வருகிற ஜூலை 23 ஆம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
இவர் பிறந்தநாளையடுத்து அவரது ரசிகர்கள் “சூரரைப்போற்று” படத்தின் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் சூர்யா பிறந்தநாளன்று சூரரைப்போற்று படத்தை பற்றி ஒரு சர்ப்ரைஸ் வெளியிடப்படவுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
தற்போது ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்தின் “காட்டு பயலே” பாடலின் ஒரு நிமிட அளவுள்ள வீடியோ சூர்யா பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி வெளியானது முதலே சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தையடுத்து சூர்யா “அருவா” என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.