தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். 2016-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இதனை கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.
இப்படத்தை தெலுங்கு மொழியில் தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி என்பவர் விநியோகம் செய்தார். தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்களையும் இவர் விநியோகம் செய்திருக்கிறார். சமீபத்தில், ஹைதராபாத்தில் இருந்த தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரியிடம் இருந்து ரூ.78.50 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரை போலீசார் கைது செய்தனர்.
அதன் பிறகு கே.பி.சௌத்ரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை சுரேகா வாணி உட்பட சில திரை பிரபலங்களுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலருக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்துள்ளது. பின், சமூக வலைத்தளங்களில் சுரேகா வாணி – கே.பி.சௌத்ரி பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுத்த சில ஸ்டில்ஸ் வெளியானது.
தற்போது, நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் “என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த ஒரு உண்மையும் இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனது குடும்பத்தினரையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் இப்பிரச்சனையில் என்னை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். தெலுங்கில் ஃபேமஸான சுரேகா வாணி தமிழ் மொழியில் தனுஷின் ‘உத்தமபுத்திரன்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, விஜய்யின் ‘மாஸ்டர்’ உட்பட சில படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
కేపీ చౌదరి డ్రగ్స్ కేసుతో తనకెలాంటి సంబంధం లేదని నటి సురేఖవాణి చెప్పారు.#surekhavani#KPChoudhary #DrugsCase #Tollywood pic.twitter.com/RdefW4o3qO
— Sardak One (@srinugo77283) June 26, 2023