விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் “நான்லாம் நியூஸ் ரீடர் கிட்ட பேசவே மாட்டேன். ஏனா அவங்க பேசுனா எச்சில் தெறிக்கும்” என நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திடம் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் தனக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையேயான மோதல் பற்றி சோமசேகரிடம் “என்னை பற்றி பேசினால் அவரும் சேர்ந்து ப்ரோமோவில் வருவார். அவர் ஃபேமஸ் ஆகலாம்னு முயற்சி பண்றாரு” என்று அனிதா சம்பத் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களின் முன்னிலையில் “I love all of you and நான் ஏதாவது உங்கள hurt பண்ணிருந்தா மன்னிச்சுருங்க. கம்மியா hurt பண்ணியிருந்தா.. hurt பண்ணனும்னு நினைச்சிருந்தா ஜாஸ்தியா பண்ணியிருப்பேன்.. ஆனா, நான் வந்து கடுமையான போட்டியாளரா இருந்து போராடி யார் ஜெயிச்சாலும் நான் ஜெயிச்ச மாதிரி நினைச்சுப்பேன்” என்று பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Day4 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/b3zSpVdzvO
— Vijay Television (@vijaytelevision) October 8, 2020