விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். இன்று காலை வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள “நாடா? இல்லை காடா? – இரண்டாம் பகுதி” டாஸ்கில் அரசரான சுரேஷ் சக்கரவர்த்தி தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அரக்கியான சனம் ஷெட்டியை தாக்கி விட, இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்று தனியாக அமர்ந்திருக்கிறார். அதற்கு சனம் ஷெட்டி “ஒரு inch கீழ பட்டிருந்தா கண்ணு போயிருக்கும். அந்த ஆளு கொடுப்பானா? என்ன நினைச்சுட்டு இருக்கான் அந்த ஆளு… ஏய் நீ வெளியில வாடா இப்போ” என்று கோபத்தின் உச்சத்திற்கு சென்று கத்துகிறார். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் சுரேஷ் சக்கரவர்த்தி கேமரா முன்பு நின்று “ப்ளீஸ் கன்ஃபஷன் ரூமுக்கு கூப்பிடுங்க பிக் பாஸ்” என்று சொல்கிறார். அதன் பிறகு கன்ஃபஷன் ரூமுக்கு சென்ற சுரேஷ் சக்கரவர்த்தியிடம் “சுரேஷ் தெரிஞ்சு பண்ணுனீங்களா?” என்று பிக் பாஸ் குரலில் ஒலிக்கிறது. அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி “சத்தியமா இல்ல பிக் பாஸ். எந்த காரணத்துக்காகவும் நான் தெரிஞ்சு செய்யல. என்ன வச்சு கார்னர் பண்ணி, நிறைய விஷயங்கள் என் காதுல விழுந்தது. இது எல்லாத்தையும் மீறி நான் நானா தான் இருக்க பாக்குறேன். கொஞ்சம் matured-ஆ பின்னாடி இருந்தேன். ஆனா, இன்னைக்கு பண்ணது ரொம்ப immatured” என்று கூறி கதறி அழுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.