‘சூர்யா 40’-ஐ இயக்கும் பாண்டிராஜ்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

  • July 19, 2021 / 01:44 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூலை 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus