பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் திஷா பதானி. இப்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் ‘யோதா’, தெலுங்கில் ‘ப்ராஜெக்ட் K’, தமிழில் ‘சூர்யா 42’ படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘சூர்யா 42’ படத்தை பிரபல இயக்குநர்களில் ஒருவரான ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இதற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.