தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப்போற்று”. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கப் போகும் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா அடுத்து மணிரத்னம் இயக்கும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கவுள்ளாராம். இந்த வெப்சீரிஸ் 9 எபிசோடுகளை கொண்டதாக இருக்கும் என்றும் ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு இயக்குனர் இயக்க போகிறார்கள் என்றும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.இந்த இயக்குனர்கள் பட்டியலில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் நடிகர் சித்தார்த் பெயரும் உள்ளதாம்.
இதற்கு முன்னரே சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் “அருவா” என்ற படத்தில் கமிட்டாகியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” என்ற படத்திலும், 24 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா இந்த வெப்சீரிஸில் நடிப்பதன் மூலம் தனக்கு கிடைக்கும் தொகையை அனாதை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கவுள்ளார் என்றும் செய்தி வந்துள்ளது. இதுமட்டுமின்றி 9 எபிசோடுகள் இருப்பதால் இந்த வெப்சீரிஸிற்கு நவரசா என்று பெயரிட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவராத நிலையில், சூர்யா நடிக்கவிருக்கும் இந்தப் பிராஜக்டின் அதிகாரபூர்வமான தகவலுக்கு அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.