அஜித்துக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அஜித் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2003-யில் ரிலீஸான தமிழ் படம் ‘காக்க காக்க’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென கெளதம் மேனனின் முதல் சாய்ஸாக இருந்தது அஜித் தானாம். பின், சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.