‘தளபதி’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… விஜய் நடிக்கவிருந்த மெகா ஹிட் படத்தில் நடித்த சூர்யா!
November 27, 2021 / 04:39 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2002-யில் ரிலீஸான தமிழ் படம் ‘உன்னை நினைத்து’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார். ஆனால், விக்ரமனின் முதல் சாய்ஸாக இருந்தது ‘தளபதி’ விஜய் தானாம். பின், சில காரணங்களால் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.