Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • February 19, 2024 / 12:01 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், சூர்யாவின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘இன்று நேற்று நாளை, அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளார்.

இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus