முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்க உள்ளாராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஜூலை 23-ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகுமாம்.