சூர்யா – ‘சிறுத்தை’ சிவா காம்போவில் உருவாகும் படம்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜெய் பீம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற நவம்பர் மாதம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

‘வாடிவாசல்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்க உள்ளாராம். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

Share.