தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, பிரபல நடிகர் சிவக்குமாரும், அவரது மகன்களும், நடிகர்களுமான சூர்யா – கார்த்தி மூவரும் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 12-ஆம் தேதி) நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, நடிகர்கள் சிவக்குமார் – சூர்யா – கார்த்தி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்போது சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
At the CMO today while #ActorSivakumar @Suriya_offl @Karthi_Offl handed over the Chq for 1Cr to Hon’ble Chief Minister @mkstalin #TNCMReliefFund 🙏🏼💐 pic.twitter.com/7mNlIiIBJF
— Rajsekar Pandian (@rajsekarpandian) May 12, 2021