தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருமே பிரபலங்கள் தான். அவரது மனைவி ஜோதிகாவில் தொடங்கி சகோதரர் கார்த்தி தந்தை சிவக்குமார் என குடும்பத்தில் அனைவருமே சினிமா துறையில் ஜொலித்து வருகிறார்கள்.
சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டுமே முகம் காட்டும் இவர்களது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “சூரரைப் போற்று” விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கார்த்தி நடிப்பில் “சுல்தான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.