அடேங்கப்பா… சூர்யா – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

  • September 10, 2022 / 05:32 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 3’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளாராம்.

நடிகர் சூர்யா – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். இப்படம் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.

இதன் பட்ஜெட் ரூ.1000 கோடியாம். சமீபத்தில், நடைபெற்ற கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் இணைந்து பணியாற்றி வருவது குறித்து நடிகர் சூர்யா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus