சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘கங்குவா’ சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.
இந்த மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யாவின் ரசிகர் ஒருவர் டிசைன் செய்த இப்படத்தின் போஸ்டர்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Journeying back to 1678, where valour and courage defined a man. Suriya in 'Kanguva' portrays the spirit of a true warrior. Here's my take on the timeless story of bravery and determination ⚔️ @Suriya_offl @StudioGreen2 #kanguva #suriya #suriya42 #actorsuriya #tamilcinema pic.twitter.com/u2x3yV0zH2
— Jay (@jayprints_) June 4, 2023