9 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி வெப் சீரிஸில் சூர்யா – விஜய் சேதுபதி!
October 29, 2020 / 12:43 AM IST
|Follow Us
ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து வெப் சீரிஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒவ்வொரு எபிசோடிலும் குறும்படம் போல் சொல்லப்படும் வெப் சீரிஸ்களும் உண்டு. அது ஆந்தாலஜி வெப் சீரிஸ் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.
தற்போது, தமிழில் உருவாகும் புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ‘நவரசா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்பது குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கே.வி.ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம், ஹலிதா ஷமீம், கார்த்திக் நரேன், ரதிந்திரன்.ஆர்.பிரசாத் மற்றும் நடிகர் அரவிந்த் சாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர்.
இதில் அரவிந்த் சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், பாபி சிம்ஹா, கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், சனந்த், விது, ஸ்ரீராம், ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா ஆகியோர் நடிக்கின்றனர். இதனை இயக்குநர் மணிரத்னம் – ஜெயந்திரா இணைந்து தயாரிக்கின்றனர். இவ்வெப் சீரிஸ் விரைவில் ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகுமாம்.