‘எதற்கும் துணிந்தவன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய சூர்யா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸும் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, ‘சூர்யா 40’ என மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

நேற்று முன் தினம் (ஜூலை 22-ஆம் தேதி) ‘சூர்யா 40’ படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும், செகண்ட் லுக் மற்றும் 3-வது லுக் போஸ்டர்ஸும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை 23-ஆம் தேதி) சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘எதற்கும் துணிந்தவன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.