தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”.இவர் பிறந்த நாளையடுத்து அவரது ரசிகர்கள் சூரரைப்போற்று படத்தில் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ குமார் சமீபத்தில் சூர்யா பிறந்தநாளன்று சூரரைப்போற்று படத்தை பற்றி ஒரு சர்ப்ரைஸ் வெளியிடப்படவுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சூர்யா. எனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டது போன்று, இந்த படத்தில் உள்ள “காட்டு பயலே” என்ற பாடலின் ஒரு நிமிட அளவு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானது முதலே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்த நாளன்று அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் திரைப்படக் குழு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.இந்தப்படத்தில் இவர்களுடன் ஊர்வசி, ஜாக்கி ஷெராப், மோகன் பாபு, பரேஷ் ரவால், சம்பத்ராஜ், கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
நிக்கேத் பொம்மி ரெட்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் காட்சிகளை சதீஷ் சூர்யா எடிட்டிங் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா இந்தப் படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.