தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 26-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின், டிசம்பர் 28-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (வயது 71) காலமானார்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 5-ஆம் தேதி) நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் திரு.சிவக்குமார், திரு.சூர்யா, திரு.கார்த்திக் அவர்கள் இன்று (05.01.2024) கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு நேரில் சென்று பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் pic.twitter.com/6rtR6EXMsk
— Premallatha Vijayakant (@imPremallatha) January 5, 2024