பாலிவுட் படத்தில் நடிக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது . மோகன் பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது . இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது .

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் . இந்த நிலையில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடிக்க இருக்கிறார் .

இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க இயக்குனர் சுதா கொங்கரா முயன்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா சூரரைப்போற்று இந்தி படத்தில் நடித்து இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share.