இதுவரை யாரும் பார்த்திராத சூர்யா படத்தின் போட்டோஷூட் மேக்கிங் வீடியோ!
October 14, 2020 / 08:49 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, 1997-ஆம் ஆண்டு ரிலீஸான ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்தார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ‘தளபதி’ விஜய்யும் நடித்திருந்தார்.
‘நேருக்கு நேர்’ படத்துக்கு பிறகு ‘காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ப்ரண்ட்ஸ், நந்தா, உன்னை நினைத்து, ஸ்ரீ, மௌனம் பேசியதே’ என செம பிஸியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் சூர்யா. இவரின் கேரியரில் ‘பேரழகன், கஜினி, மாற்றான்’ போன்ற படங்களில் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களில் வலம் வந்திருந்தார்.
2006-ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இப்போது சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று, வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சூரரைப் போற்று’ வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. இந்நிலையில், சூர்யா நடித்து கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘NGK’ படத்தின் போட்டோஷூட் மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.