தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இதில் சூர்யாவுடன் இணைந்து விக்ரமும் நடித்திருந்தார்.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படத்தை ‘எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ஏ.துரை தயாரித்திருந்தார்.
தயாரிப்பாளர் வி.ஏ.துரை ‘பிதாமகன்’ மட்டுமில்லாமல் ‘என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, கஜேந்திரா’ ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்.
இன்று தயாரிப்பாளர் வி.ஏ.துரை வெளியிட்டிருந்த ஒரு வீடியோ பதிவில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதுடன், சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது, இவரின் சிகிச்சைக்காக நடிகர் சூர்யா ரூ.2 லட்சம் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest
Movie News Update. Get
Filmy News LIVE Updates on FilmyFocus