‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா – ஜோதிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • June 23, 2021 / 10:14 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஜூன் 22-ஆம் தேதி) நடிகர் சூர்யாவும், அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவும் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சூர்யாவே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus