வெளிநாட்டுக்கு தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள், மகனுடன் சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

  • July 4, 2023 / 09:17 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கங்குவா’ சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகா மற்றும் மகள், மகனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus