அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சூர்யா & கார்த்தி!

  • March 27, 2023 / 12:19 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி (வயது 85) கடந்த மார்ச் 24-ஆம் தேதி அதிகாலை இயற்கை எய்தினார்.

தற்போது, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus