முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. தற்போது, சூர்யாவின் பல ரசிகர்கள் கையெழுத்து போடப்பட்ட ஒரு போர்டை வானில் பறக்கும் ஸ்பேஸ் பலூனுடன் சேர்த்து ஜெர்மனில் பறக்க விட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சூர்யாவே வீடியோ மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.
https://twitter.com/Suriya_offl/status/1326442518431506432