துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா ?

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் . நடிகர் விஜய்யை தொடர் தோல்விகளில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்ப அழைத்து சென்ற படம் துப்பாக்கி . இந்த படம் 100 கோடி வசூல் செய்த விஜய்யின் முதல் படம் என்ற பெருமையை பெற்ற படம்.

இப்படிப்பட்ட இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முதலில் ஹிந்தியில் இயக்கலாம் என்ற முடிவை எடுத்து வைத்திருந்தார் . நடிகர் அக்‌ஷய் குமாரிடம் இந்த கதை சொல்லி இருந்தார் முருகதாஸ் . அந்த சமயத்தில் அக்‌ஷய் குமார் வேற ஒரு ஹிந்தி படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் . இந்த காரணமாக அப்பொழுது அக்‌ஷய் குமாரால் அந்த படத்தில் நடிக்க இயலவில்லை .

இதனால் அந்த படத்தை தமிழில் முதலில் எடுக்கலாம் என்று நினைத்தார் .நடிகர் சூர்யாவிடம் இரண்டு கதைகளை சொல்லி இருக்கிறார் முருகதாஸ் . அதில் முதல் கதை ஏழாம் அறிவு மற்றொன்று துப்பாக்கி கதை.

நடிகர் சூர்யா முதலில் ஏழாம் அறிவு படம் பண்ணலாம் என்றும் அதன் பிறகு துப்பாக்கி படத்தை எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார் .

இந்த நிலையில் ஒரு நாள் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் முருகதாஸ்க்கு போன் செய்து விஜய்க்கு கதை இருந்தால் கூறுங்கள் என்று கேட்டு இருக்கிறார் , அப்பொழுது தான் முருகதாஸ் துப்பாக்கி கதையை நடிகர் விஜய்யிடம் கூறி உள்ளார் . அதன் பிறகு இந்த படம் உருவாகி பின் வெளியாகி நடிகர் விஜய்யின் திரை வழக்கையே மாற்றி அமைத்தது என்று சொன்னால் மிகை ஆகாது.

Share.