Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

  • January 9, 2024 / 10:39 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2018-யில் ரிலீஸான ஹிந்தி படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

இதில் ஹீரோவாக ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் முதல் சாய்ஸாக இருந்தது சூர்யா தானாம், அவரிடம் கதையும் சொல்லிவிட்டாராம். பின், சில காரணங்களால் சூர்யாவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus