ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-க்கு எதிராக நடிகர் சூர்யா போட்ட ட்வீட்!
July 2, 2021 / 06:05 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், மத்திய அரசு அறிவித்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-க்கு எதிராக டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் உட்பட பலர் ட்வீட் போட்டிருந்தனர். தற்போது, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” என்று கூறியுள்ளார்.