சமீபகாலமாக நடிகர் நடிகைகளின் பிறந்த நாள் மற்றும் திரைப்படத்தின் பாடல் வெளியீடு, திரைப்படத்தின் டீஸர் வெளியீடு போன்றவற்றிற்கு திரைப்படக் குழு மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் நடிகர்களின் ஃபேன்களும்கூட போஸ்டர்களை செய்து வெளியிடுவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு உருவாகும் ஃபேன் மேட் போஸ்டர்கள் திரைப்படக்குழுவினர் வெளியிடும் போஸ்டர்களை போல தத்ரூபமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது பார்ப்பதற்கு திரைப்படக் குழு வெளியிட்டதை போல தத்ரூபமாக உள்ளதால் நடிகர் சூர்யாவும் இந்த ஃபேன் மேட் போஸ்டரை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஜாக்கிஷராப், கருணாஸ் மோகன்பாபு, பரேஷ் ரவால் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.