சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘கங்குவா’ சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாபி தியோல், ஜெகபதி பாபு, நட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் GLIMPSE வெளியிடப்பட்டது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் & GLIMPSE படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் ராஜமுந்திரியில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இந்த ராஜமுந்திரி ஷெட்யூல் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Schedule wrap for #Kanguva
SUMMER 2024 RELEASE pic.twitter.com/uSOR4QflSK
— Suriya Fans Club (@SuriyaFansClub) September 2, 2023