சூர்யா – சினேகா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘உன்னை நினைத்து’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • April 7, 2022 / 10:40 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘உன்னை நினைத்து’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் லைலா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.7.80 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus