தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 28-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (வயது 71) காலமானார்.
தற்போது, பிரபல நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..
கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!” என்று குறிப்பிட்டதுடன், அவரை பற்றி பேசிய வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.